தாரமங்கலம் நகராட்சி பஸ் நிலையம் அருகே பெட்ரோல் பங்க் பகுதியையொட்டி ராஜவாய்க்கால் சாக்கடைகால்வாய் திறந்த வெளியில் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்வதால் அந்த சாக்கடைகால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதி சாக்கடைகால்வாயையொட்டி இரும்பு கம்பி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-குமார், தாரமங்கலம்.