பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரிப்பு

Update: 2025-07-06 19:26 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமீப காலமாக பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி மற்றும் கிராமப்பகுதிகளில் அதிக அளவில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓட்டல்களில் இலைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர்களில் உணவு வைத்து கொடுக்கும் பழக்கமும், அதேபோல சூடான சாம்பார், உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் கட்டி கொடுக்கும் பழக்கமும் உள்ளது. எனவே பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சஞ்சீவ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்