பாதியில் நிற்கும் கழிவறை பணி

Update: 2025-07-06 19:24 GMT

பர்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க வட்டார மேலாண்மை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு உட்பட்ட பர்கூர் ஒன்றியம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுவின் பொறுப்பாளர்களும் அலுவலகத்திற்கு வரும்போது அவர்கள் பயன்படுத்த அங்கு கழிவறை கட்டப்பட்டது. பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடைக்கிறது. மேலும் பணியாளர்களும், மகளிர் சுய உதவி குழுவினரும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே விரைந்து கழிவறையை கட்டிமுடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-மணி, பர்கூர்.

மேலும் செய்திகள்