போலீசார் ரோந்து

Update: 2025-06-15 17:40 GMT

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அளவாய்பட்டியில் சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது. இதன் அருகே இரவு நேரத்தில் சிலர் மது அருந்திவிட்டு ஆங்காங்கே மது பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்பவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி வெண்ணந்தூர் போலீசார் அப்பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-செந்தில், அளவாய்பட்டி.

மேலும் செய்திகள்