கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் விரைவு ரெயில் பொள்ளாச்சி,உடுமலை வழியாக திருச்செந்தூருக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் விசேஷ நாட்களில் பயணிகள் நிரம்பி இருக்கிறது. இதனால் குழந்தைகள்,கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள்,முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். போதிய இருக்கை வசதியில்லாமல் இருப்பதால் பலர் படிக்கட்டுகளில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த ரெயிலுடன் கூடுதல் பெட்டிகளை இணைக்க துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.