பள்ளிபாளையம் சுபாஷ் நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். தெருக்களில் நடந்து செல்லும் குழந்தைகளையும், பெண்களையும் தெருநாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. எனவே இந்த பகுதியில் உள்ள தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணியன், பள்ளிபாளையம்.