பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா

Update: 2025-05-18 16:19 GMT

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் குழந்தைகள் பூங்கா உள்ளது. இங்கு சிறுவர்-சிறுமிகள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சீசா உள்ளிட்ட உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. மேலும் அதில் உள்ள தகடுகள் துருப்பிடித்து இருப்பதால் குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்படுகின்றன. மேலும் இந்த பூங்கா முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என்பதே இந்த பகுதிமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

-கிருஷ்ணன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்