திருச்செங்கோடு தாலுகா பெரியமணலி கிராமத்தில் ஜேடர்பாளையம் அருந்ததியர் தெரு உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் லேசான அளவில் மழை பெய்தாலும் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் மற்ற பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் இங்கு குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே இப்பகுதி பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் கழிவுநீரை அப்பறப்படுத்தவும், மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் வழி வகை செய்ய வேண்டும்.
-ரமேஷ், பெரியமணலி.