கொல்லிமலை அரியூர் நாடு ஊராட்சி மேல்கலிங்கம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற் கூடம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த நிழற் கூடம் தற்போது ஆங்காங்கே சிமெண்டு பூச்சுகள் உடைந்து பயனற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அங்கு செல்ல பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் நிழற்கூடத்தை புதுப்பிக்க வேண்டும் என்று அப்பகுதி மலைவாழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-சீனிவாசன், சோளக்காடு.