அடிக்கடி விபத்துகள்

Update: 2025-05-11 15:26 GMT

தர்மபுரி-சேலம் இரு வழி சாலையில் ஒட்டப்பட்டி வரை சாலையின் மையத்தடுப்பு பகுதியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒட்டப்பட்டி முதல் அதியமான் கோட்டை மேம்பாலம் தொடங்கும் பகுதி வரை மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் சாலை இருளில் மூழ்குகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதை தவிர்க்க அதிக வாகன போக்குவரத்து உள்ள இந்த சாலையின் மையத்தடுப்பு பகுதியில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், அதியமான்கோட்டை.

மேலும் செய்திகள்