பராமரிக்கப்படாத சுகாதார வளாகம்

Update: 2025-05-11 15:19 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் பெங்களூரு பஸ்கள் நிற்க கூடிய இடத்தில் பயணிகளுக்கான சுகாதார வளாகம் உள்ளது. இது முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியில் நிற்க கூடிய பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். முறையாக பராமரிக்கப்படாததால் அந்த பகுதி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காணப்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சூர்யபிரகாஷ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்