குரங்குகள் தொல்லை

Update: 2025-05-04 17:23 GMT

வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் சித்தர் கோவில் அருகே மற்றும் அளவாய்மலை பாலசுப்ரமணிய சாமி கோவில் அடிவாரம் அருகே உள்ள பகுதிகளில் குரங்குகள் அதிக அளவு உள்ளன. இப்பகுதியில் போதிய தண்ணீர் மற்றும் உணவுகள் இல்லாத நிலையில் அவை வீடுகள் உள்ள பகுதிகளுக்கு சென்று உணவு தேடி தொல்லை செய்கின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் குரங்குகளை கண்டு அச்சப்படுகிறார்கள். ஒரு சிலரை குரங்குகள் கடித்து விட்டு செல்கின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் உள்ள குரங்குகளுக்கு கருத்தடை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-கனகராஜ், அத்தனூர்.

மேலும் செய்திகள்