கொல்லிமலையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அடிவாரத்தில் காணப்படும் புளியஞ்சோலை ஆற்றுப்பகுதிக்கும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அங்குள்ள சோதனைச்சாவடியில் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கொட்டகை மழை, வெயிலுக்கு பொதுமக்கள் ஒதுங்க முடியாத நிலையில் மிக குறுகிய அளவில் காணப்படுகிறது. எனவே அந்த சோதனைச்சாவடியை விரிவுப்படுத்தி புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றும், சுற்றுலா பயணிகள் சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்வதற்கும் தனித்தனியாக அறைகள் கட்ட வேண்டும் என்றும் அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
-சத்யேந்திரன், பச்சபெருமாள்பட்டி.