பழனி அருகே மானூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. இந்த நிழற்குடையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுகிறது. இதனால் நிழற்குடை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த நிழற்குடையை விரைந்து சீரமைக்க வேண்டும்.