பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெருவில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. அந்த தெருவில் சில கடைக்காரர்களும், தள்ளுவண்டி கடைக்காரர்களும் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் அந்த வழியாக பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.