Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
15 Feb 2026 5:45 PM GMT
துரைசாமி | மதுரை கிழக்கு
#63082

நடவடிக்கை எடுப்பார்களா?

குப்பை

மதுரை திருமோகூர் சாலையில் ஒத்தகடை பகுதி சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு அதில் சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் புகையால் சுற்றுச்சூழலும் மாசடைகிறது. மேலும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளதால் அச்சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jan 2026 4:37 PM GMT
துரைசாமி | பழநி
#62508

காந்திமார்க்கெட் கட்டிடம் திறக்கப்படுமா?

மற்றவை

பழனி பெரியகடைவீதியில் செயல்படும் காந்தி மார்க்கெட்டுக்காக புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு விழா காணாமல் இருக்கிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கட்டிடத்தை விரைவில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Aug 2025 12:16 PM GMT
துரைசாமி | இராமநாதபுரம்
#58674

விபத்து அபாயம்

மற்றவை

ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகளில் ஆபத்தை உணராமல் சிலர் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குகின்றனர். குறிப்பாக வாலிபர்கள் சிலர் நகர் பகுதியில் அதிவேகத்தில் செல்கின்றனர். இவர்களால் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள், நடைபாதையினர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 5:15 PM GMT
துரைசாமி | பழநி
#58398

மண் குவியலால் போக்குவரத்துக்கு பாதிப்பு

மற்றவை

பழனியை அடுத்த கோதைமங்கலம் ஊராட்சி அரிமாநகரில் பொதுப்பாதையில் மக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக மண், கற்களை சிலர் குவித்து வைத்துள்ளனர். இதனால் அந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் வாகன போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மண் குவியலை உடனே அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Jun 2025 5:16 PM GMT
துரைசாமி | பழநி
#56593

கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணி

சாலை

பழனியை அடுத்த மேற்கு ஆயக்குடியில் தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக அப்பகுதியில் பள்ளமும் தோண்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு தரைப்பாலம் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்ட தரைப்பாலம் கட்டும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 May 2025 4:47 PM GMT
துரைசாமி | பழநி
#56235

சீரான மின்வினியோகம் அவசியம்

மின்சாரம்

பழனி அருகே சின்ன கலையம்புத்தூர் பகுதியில் வீடுகளுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் வருகிறது. இதனால் வீட்டில் உள்ள டி.வி., மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. எனவே சீரான மின்சாரம் வினியோகம் செய்வதற்கு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 May 2025 5:12 PM GMT
துரைசாமி | பழநி
#55864

சேதமடைந்த நிழற்குடை

மற்றவை

பழனி அருகே மானூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. இந்த நிழற்குடையின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுகிறது. இதனால் நிழற்குடை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த நிழற்குடையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 4:44 PM GMT
துரைசாமி | பழநி
#53907

குவிந்து கிடக்கும் குப்பை

குப்பை

பழனி சண்முகநதியில் புனித நீராட வரும் பக்தர்கள், தங்களிடம் இருந்த பழைய துணிகளை ஆற்றின் கரையோர பகுதியில் போட்டுச்செல்கின்றனர். மேலும் ஆற்றில் குப்பைகளும் வீசப்படுகிறது. இதனால் சண்முகநதியில் தற்போது குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் ஆற்றுநீர் மாசடைவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே சண்முகநதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Dec 2024 4:29 PM GMT
துரைசாமி | பழநி
#52223

புதர்மண்டி கிடக்கும் பூங்கா

பூங்கா

பழனியில் புதுதாராபுரம் ரோடு, ஆர்.எப்.ரோடு, திண்டுக்கல் ரோடு ஆகிய சாலையோரங்களில் பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களை ஆக்கிரமிக்கும் வகையில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும் அவற்றை மேய்வதற்காக வரும் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே பூங்காக்களில் வளர்ந்துள்ள புதர்களை விரைவாக அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Aug 2024 5:57 PM GMT
துரைசாமி | பழநி
#49207

புதர்களால் வாகன ஓட்டிகள் அவதி

சாலை

பழனி-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் பழனியில் இருந்து தாளையம் வரை உள்ள சாலையோரங்களில் சீமை கருவேலமரங்கள், செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதன் காரணமாக சாலை குறுகலாக மாறி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோர புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 April 2024 4:00 PM GMT
துரைசாமி | பழநி
#46329

தார்சாலை அமைக்க வேண்டும்

தார்சாலை அமைக்க வேண்டும்சாலை

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சி பழனியாண்டவர் நகரில் சில இடங்களில் சாலை வசதி இல்லாமல் மண்பாதையாகவே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதேபோல் மண்பாதையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மணலில் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே அந்த பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 1:45 PM GMT
துரைசாமி | செங்கல்பட்டு
#45787

மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் தென்றல் நகரில் இருந்து தாம்பரம் சானடோரியம் வரை மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓரு மாதங்களாக இந்த பஸ், தென்றல் நகர் பஸ் நிறுத்தத்திற்கு வராமல் மாற்று பாதையில் செல்கிறது. இதனால், இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick