கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் அக்ரஹாரம், முல்லை நகர் பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளன. இரவு நேரத்தில் கூட்டம், கூட்டமாக சுற்றும் நாய்களால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.