அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள முடிகொண்டான் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மெயின் ரோடு இ.பி. அலுவலகம் எதிரே தெருவிளக்குகள் முறையாக எரிவதில்லை. ஊரின் முக்கிய பகுதியான இங்கு இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அனைத்து தரப்பு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருவிளக்குகளை சரிசெய்து அதனை ஒளிர வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.