அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆணைவாரி ஓடையில் தடுப்பணைகள் கட்டப்பட்டள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து வெள்ளாறு வரை சீமைக்கருவேல மரங்கள் முளைத்து காடு போல காட்சி அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையில் காட்டாற்று வெள்ளம் செல்ல முடியாமல் கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. எனவே மழை காலங்களுக்கு முன்னர் இந்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி ஓடையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.