கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேற்பகுதியில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி வரை செடி, கொடிகள் படர்ந்துள்ளன. மேலும் சில இடங்களில் கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிடத்தில் படர்ந்துள்ள செடி, கொடியை அகற்றவும், சேதமடைந்த கட்டிடத்தை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.