பூங்கா பராமரிக்கப்படுமா?

Update: 2025-05-04 12:25 GMT



தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் சிறுவர் பூங்கா உள்ளது. அதில் உள்ள விளையாட்டு சாதனங்கள் துருப்பிடித்து சேதமடைந்துள்ளது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது.தற்போது கோடை விடுமுறை என்பதால் அந்த பகுதி சிறுவர்கள் ஒரு வித அச்சத்துடனேயே விளையாடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள்் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்