ராசிபுரம் ஆண்டகலூர் கேட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவ்விடத்தில் இருந்த தனியார் ஏ.டி.எம். எந்திரங்கள் பெரும்பாலானவை அகற்றப்பட்டன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த பகுதிக்கு அடிக்கடி வந்து செல்லும் லாரி டிரைவர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இருக்கும் ஒரு சில ஏ.டி.எம்.களிலும் பணம் எடுக்க முடியாத நிலைஉள்ளது. எனவே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கூடுதலாக ஏ.டி.எம்.களை அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும்.
-ராஜன், ராசிபுரம்.