அம்மாபேட்டை பஸ் நிறுத்தம் அருகில் காமராஜர் நுழைவுவாயில் அருகில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த இடத்தில் 2 வேகத்தடைகள் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
-சசிகாந்த், தாரமங்கலம்.