சாக்கடை தூர்வாரும் பணி

Update: 2025-04-13 17:28 GMT

கிருஷ்ணகிரி நகரில் சாக்கடைகள் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சென்னை சாலை, பெங்களூரு சாலை உள்பட முக்கிய இடங்களில் பொக்லைன் மூலமாக பெரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் சென்று வருகிறார்கள். குறிப்பாக சென்னை சாலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சாக்கடை தூர்வாரும் பணிகள் நடந்து வருவதால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் கடைகளை திறக்காமல் இருந்து வருகிறார்கள். இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிவக்குமார், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்