திருச்செங்கோடு சூரியம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்களை கடிக்க கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்டவர்களை தெருநாய்கள் கடித்துள்ளன. எனவே தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பிரகாஷ், திருச்செங்கோடு.