சுகாதார சீர்கேடு

Update: 2025-04-06 16:39 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு ஆண்களுக்கான சிறுநீர் கழிக்கும் இடங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பல ஆண் பயணிகள் திறந்த வெளியில் சிறுநீர் கழித்து செல்வதால் பஸ் நிலையத்தில் ஓசூர், பெங்களூரு பஸ்கள் நிற்கும் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரதாப், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்