சேறும், சகதியுமான மார்க்கெட்

Update: 2025-03-16 17:13 GMT

தலைவாசல் பஸ் நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் பகுதியில் சிறிய அளவில் மழை பெய்தாலும் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் மார்க்கெட்டிற்கு வரும் வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் மழை நேரங்களில் இந்த பகுதி சேறும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் தேங்காத வகையில் மணல், கற்கள் கொண்டு மேடு, பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தினேஷ், சேலம்.

மேலும் செய்திகள்