பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2025-03-16 16:53 GMT

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படும் கால்நடைகள் சுற்றுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. குறிப்பாக அந்த பகுதிகளில் வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு நடுரோட்டில் கால்நடைகள் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. எனவே தாலுகா அலுவலக பகுதிகளில கால்நடைகளை அவிழ்த்து விடுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

-பிரவீன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்