பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2025-03-09 09:50 GMT


மூலனூர் அண்ணாநகர் பகுதியில் தாராபுரம் மற்றும் கரூர் பிரதானப் போக்குவரத்துச் சாலையில் இருந்த நிழற்குடை பழுதடைந்து முழுமையாக தகர்ந்து போனது., சாலையின் இருபுறமும் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை ஏதும் இல்லாமல் இருப்பதால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் தற்போது வெயில் காலம் என்பதால் முதியவர்கள் அவதியுறும் நிலை உள்ளது. எனவே அண்ணாநகர் பகுதியில் உள்ள பஸ்நிறுத்தத்தில் பேரூராட்சி நிர்வாகம் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாமி, மூலனூர்.

மேலும் செய்திகள்