பழுதான சமுதாய கூட கட்டிடம்

Update: 2025-03-02 10:24 GMT

பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் சமுதாய கூடம் உள்ளது. இதனை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சமுதாய கூட கட்டிடத்தின் மேல் தளத்தில் மகளிர் திட்ட அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது. சுற்றுச்சுவரும் இல்லாததால் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. எனவே அந்த கட்டிடத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்