நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் அரசு மகளிர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளன. இந்த பகுதி பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், அரசு அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் மழை, வெயில் நேரங்களில் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில் இந்த பஸ் நிறுத்த பகுதியில் அதிகாரிகள் விரைந்து நிழற்கூடம் அமைத்தால் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
-ஜோதி, நாமகிரிப்பேட்டை.