உடுமலை பள்ளபாளையம் அருகே விளை நிலம் ஒன்று அழிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுள்ளது. அதில் போக்குவரத்துக்கு ஏதுவாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையானது உடுமலை- திருமூர்த்திமலை சாலையின் ஓரத்தில் வளர்ந்துள்ள புளிய மரத்தை மையமாகக் கொண்டு உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வீட்டு மனை இடத்தில் போடப்பட்டுள்ள சாலையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.