காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு நரிவனசாலை மிகவும் பரபரப்பான சாலை ஆகும். இந்த சாலை வழியாக பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த சாலையின் நடுவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.