பொங்கலூரில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த தொலைத் தொடர்பு அலுவலகம் தற்போது புதர் மண்டி கேட்பாரற்று கிடைக்கிறது. ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த இந்த அலுவலகம் தற்போது கொடி படர்ந்து பார்ப்பதற்கே பரிதாபமான நிலையில் காட்சியளிக்கிறது. அதனை சுத்தப்படுத்தி பராமரிப்பதற்கு கூட அந்த நிறுவனத்தால் முடியவில்லை என்பது வேதனையான விஷயம். எனவே செடி-கொடிகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமன், பொங்கலூர்.