ஆபத்தான நீர்த்தேக்கத் தொட்டி

Update: 2025-02-02 17:53 GMT

குண்டடம் ஊராட்சி ஒன்றியம், பெருமாள் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வரட்டுக்கரைபதி என்ற கிராமத்தில் பயனற்று, பாதுகாப்பு இல்லாத நிைலயில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. பயன்பாடில்லாமல் உள்ள இந்த நீர்த்தேக்க தொட்டி தூண்கள் சிமெண்டு பூச்சுகள் விழுந்து உள்ளே உள்ள இரும்பு கம்பி தெரிகிறது. இதனால் எந்த நேரத்திலும் இ்டிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்கு முன்பாக இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் செய்திகள்