சேதமடைந்த கிணற்றின் மூடி

Update: 2025-02-02 16:49 GMT

சேலம்-ஓமலூர் செல்லும் வழியில் மாமாங்கம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகில் பெரிய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இரும்பு மூடி சேதமடைந்து உள்ளது. இந்த கிணற்றின் அருகில் குடியிருப்பு பகுதி உள்ளதால் சிறுவர்கள் விளையாட்டாக கிணற்றின் திட்டின் மீது அமர்கின்றனர். ஏதேனும் விபத்து ஏற்படும் முன்பு ஆபத்தான வகையில் உள்ள இந்த கிணற்றின் மூடியை மாற்றி அமைக்க வேண்டும்.

-முனியப்பன், சேலம்.

மேலும் செய்திகள்