சாலையோரம் ஆபத்தான கிணறு

Update: 2025-02-02 13:04 GMT

ஏரியூர்-பென்னாகரம் பிரதான சாலையில் மடம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சாலை வளைவில் கிணறு உள்ளது. இந்த பகுதியில் கிணறு இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்து நடக்கிறது. இரவு நேரங்களில் இந்த வழியாக வருவோர் கிணறு இருப்பது தெரியாமல் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்பு சாலையோரம் உள்ள ஆபத்தான கிணற்றை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்கலாமே.

-பழனிசாமி, மடம்.

மேலும் செய்திகள்