மஞ்சாரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செல்லமுடி பகுதியில், ஏரியூர்-மேச்சேரி பிரதான சாலையின் குறுக்கே உள்ள ஓடைகளை ஆக்கிரமித்து, கட்டிட கழிவுகளும், குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதனால் ஓடை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தேங்காமல் வறண்டு விடுகிறது. இதன் காரணமாக அங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே நீர் நிலைகளில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வே்ணடும்.
-மாயக்கண்ணன், கவுண்டனூர்.