நாமகிரிப்பேட்டை கார்கூடல்பட்டி ஊராட்சியில் மெட்டாலா கிராமம் உள்ளது. இந்த கிராமம் 3 சாலைகள் சந்திக்கும் பிரதான பகுதியில் உள்ளது. இந்த பகுதி மக்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்கு சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியது உள்ளது. இதனால் கால விரயம் ஏற்படுகிறது. எனவே மெட்டாலா கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சாமி, நாமக்கல்.