தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே பாழடைந்த நிலையில் வருவாய்த்துறைக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை வருவாய்த்துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதனை முழுமையாக செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். தற்போது இது புதர்கள் மண்டி சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் மது பிரியர்கள் மது அருந்தவும், இதர செயல்களில் ஈடுபடவும் பயன்படுத்துகின்றனர். எனவே இந்த கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-சரவணன், தேன்கனிக்கோட்டை.