தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை ரோடு எஸ்.எஸ்.நகர், பல்லக்கு ரோடு பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் மலேரியா போன்ற நோய்களால் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கவும், சுத்தமாக பராமரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.