சேலம் புதிய பஸ் நிலையம் சிக்னல் முதல் சுவர்ணபுரி வரை உள்ள நடைபாதையை இரு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி பயன்படுத்துகின்றன. இதனால் நடைபாதையில் செல்லும் பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே இந்த நடைபாதை மேல் இருசக்கர வாகனங்கள் செல்லாமல் இருக்க தடுப்புகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே பாதசாரிகளின் கோரிக்கையாக உள்ளது. மேலும் நடைபாதையை பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ்குமார், சேலம்.