கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் பெங்களூரு, ஓசூர் பஸ்கள் நின்று செல்ல கூடிய இடத்தின் அருகில் ஆண்களுக்கான சுகாதார வளாகம் இயங்கி வருகிறது. இந்த வளாகம் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதே போல திறந்த வெளியில் பஸ் நிலையத்தில் பயணிகள் பலரும் சிறுநீர் கழித்து செல்வதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே பஸ் நிலைய வளாகத்தில் உள்ள சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாபு, குருபரப்பள்ளி.