போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2024-12-22 12:00 GMT

கோவை காந்திபுரம் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து ஆர்.டி.ஓ. அலுவலகம் செல்லும் பாலசுந்தரம் சாலையோரத்தில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையோரத்தில் உள்ள மரங்களின் கிளைகள் மின்கம்பிகள் மீது உரசாமல் இருக்க வெட்டப்பட்டன. ஆனால் வெட்டப்பட்ட மரக்கிளைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் நடைபாதையிலேயே போட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு நடந்து செல்வோர் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கும் மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்