காங்கயம் பஸ் நிலைய பொதுக் சுகாதார வளாகத்தில் மேற்கூரை அமைக்கப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. எனவே பெண்கள் இந்த கழிப்பிடத்தை பயன்படுத்த சிரமப்படுகின்றனர். எனவே மேற்கூரை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வெளிப்படை தன்மை என்பது இதுவல்ல என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.