பக்தா்கள் சிரமம்

Update: 2024-12-15 16:40 GMT

கிருஷ்ணகிரி அருகே கணவாய்ப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் மேல்தளங்களில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் கோவிலின் உள்ளே ஒரு சில இடங்களில் நீர் கசிந்து வடிகிறது. இதனால், சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சிரமம் அடைகிறார்கள். இதே போல், குரங்குகள் தொல்லையும் கோவிலில் அதிகரித்து காணப்படுகிறது. எனவே இந்து சமய அறிநிலையத்துறை அலுவலர்கள் கோவிலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குரங்குகளின் தொல்லையும் கட்டுப்படுத்திட வேண்டும்.

-மணிகண்டன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்