பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நம்பியார்குன்னு, மதுவந்தால் ஆகிய பகுதிகள் தமிழக-கேரள எல்லையில் உள்ளன. இந்த பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் எங்குமே பொது கழிப்பிடம் கிடையாது. இதனால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆனாலும் பெண்கள் அவதிப்பட நேரிடுகிறது. எனவே அங்கு பொது கழிப்பிடம் அமைத்து கொடுக்க வேண்டும்.