விஷ ஜந்துகள் நடமாட்டம்

Update: 2024-12-01 12:42 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கோட்டப்பாடியில் இருந்து மழவன்சேரம்பாடி வரை நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அடர்ந்து காடு போல வளர்ந்து உள்ளன. அங்கு காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நின்றாலும் தெரிவது இல்லை. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டமும் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்