புதர்கள் அகற்றப்படுமா?

Update: 2024-12-01 12:41 GMT

கோவை வேடப்பட்டி சாலையில் புதிதாக ஸ்மார்ட் சிட்டி குளம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இங்கிருந்த குளத்தை அழகுபடுத்தி தற்போது அதன் கரையில் நடைபாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடைபாதையின் இருபுறமும் புற்கள் அதிகளவில் வளர்ந்து நடப்பதற்கு இடையூறாக உள்ளது. இதனால் அங்கு நடந்து செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் விஷ ஜந்துகள் நடமாட்டமும் உள்ளது. எனவே கோவை மாநகராட்சி அதிகாரிகள், நடைபாதையில் வளர்ந்துள்ள புற்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்