கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் 5-ம் நெம்பர் விரிவு பகுதியில் ஆபத்தான நிலையில் மரம் ஒன்று வளைந்து நிற்கிறது. இந்த மரம் சூறாவளி காற்று வீசும்போது, எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த மரத்தை உடனடியாக வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.